ஊர்ப் பொது நிலத்தை போலி பத்திரம் மூலம் கிறிஸ்துவ டயோசீசனுக்கு எழுடிக் கொடுத்ததை கண்டித்து நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட இந்து முன்னணி முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா கட்டாரங்குளம் கிராமத்தில் ஊர்ப் பொது நிலத்தை கிறித்துவ டயோசீசனுக்கு போலி பத்திரம் போட்டுக் கொடுத்த கிறிஸ்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்துமுன்னணி யினர் ஊர் பொதுமக்கள் மானூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கிராமத்தினர் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மானூர் தாசில்தார் சமாதான பேச்சு நடத்தியதை அடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.