April 30, 2025, 9:58 PM
30.5 C
Chennai

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

online vegetables sales
online vegetables sales

கொரோனா காலத்திலும் மக்களுக்கு கை கொடுத்த ஆன்லைன் விஜெடபிள் பிஸ்னஸ் – கரூரில் கம்யூட்டர் பட்டதாரி இளைஞரின் அதிரடி சாதனை – கைத்தொழில் ஒன்றினை கற்றுக்கொள் – கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று தனது சுய தொழிலால் முன்னேறிய இளைஞரின் சுவாரஸ்ய சாதனை

கொரோனா காலம் தற்போதும் 4 வது ஊரடங்கு காலம் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பல தொழில்களை முடக்கியதோடு, மக்களுக்கு பல்வேறு மாற்றங்களையும், பல்வேறு யுத்திகளையும் புரியவைத்துள்ளது என்றால் அது மிகையாகாது., தமிழகத்தில் கரூரில் உள்ள ஒரு கணினி பட்டதாரி இளைஞர் கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வராமல் இருக்கவும், வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் எப்படி உண்ண உணவு ஆர்டர் செய்கின்றனரோ, அந்த ஆப் மூலமாகவும், அவருடைய சொந்த ஆப் மூலமாகவும் ஆன்லைன் விஜிடெபுள் வியாபாரம் செய்து வருகின்றார். மேலும், பெரிய கம்பெனியில் வேலை  என்ற  எல்லையை உடைத்து, தனது  சொந்தத் தொழில் செய்து சாதிக்கும் இளைஞர்கள்  இப்போது பெருகி வருகின்றார்கள் அதற்கு  கரூர் அன்சாரி தெருவினை  சேர்ந்த மகேஸ்வரன் இதற்கு ஓர் உதாரணம்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட அன்சாரி தெரு பகுதியினை சார்ந்த கே.ஜெகதீஸ் – ஜெ.கவிதா ஆகியோரின் மூத்த மகன், மகேஸ்வரன் (வயது 22)., இதே பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் உள்ள ஜெயம் விஜிடெபுள்ஸ் கடை என்கின்ற காய்கறி கடை ஒன்றினை நடத்தி வருகின்றார். மேலும், கடந்த 2019 ம் ஆண்டில், கணினி (B.sc., computer science) பட்டயப்படிப்பு முடித்த நிலையில், ஏற்கனவே, இவர், தந்தை ஜெகதீஸ் கவனித்து வந்த காய்கறி வியாபாரத்தினையும் பார்த்து வந்ததோடு, இன்ஃபோசிஸில் கிடைத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, கரூர் காமராஜர்  மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்துவருகிறார்.  இவரது தந்தையின் வேலையான காய்கறி வியாபாரத்திலே ஒரு புதுமை புகுட்டும் விதமாக, ஆன்லைன் மூலம் காய்கறி வியாபாரம் செய்ய ஒரு புதிய யுக்தி ஒன்றினையும் கண்டுபிடித்து நூதனமாக தற்போது முன்னேறியுள்ளார்.

ALSO READ:  சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

கரூர்  நகரத்துக்குள்  உணவு  டெலிவரி  செய்யும்  4  ஸ்டார்ட் அப் கம்பெனிகளான delivery star, swiggy, zomato, flyer eat ஆகியவைகள்  மூலம்  காய்கறிகளை  டோர்  டெலிவரி  செய்து  மாதம் ரூ 25 ஆயிரம்  வரை சம்பாதித்து கலக்கிவருகிறார்.

online vegetables sales
online vegetables sales

கணினி பட்டதாரி இளைஞரான மகேஸ்வரனின்  தாத்தா  காளியப்பன் அவரது மகனும், மகேஸ்வரனின் தந்தையுமான  ஜெகதீஷ் ஆகியோரும் தொன்று தொட்டு காய்கறி மொத்த வியாபாரம் செய்த  குடும்பம் தான். ஆனால், மகேஸ்வரனைப்  பெரிய  படிப்பு  படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, கைநிறைய சம்பாதிக்கவைக்க வேண்டும் என்று பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவைத்தார்கள் அவர் குடும்பத்தினர். கடந்த  வருடம் பி.எஸ்ஸி  கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து  முடித்த கையோடு கேம்பஸ் இன்டர்வியூவில் இன்ஃபோசிஸ் கம்பெனியில்  ரூ.16,000 சம்பளத்தில்  வேலை  கிடைத்தும், வேலை கிடைத்தும்  வீட்டில்  உள்ளவர்களுக்கும் மகேஸ்வரனுக்கும்  ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந்துள்ளது.

ஆனால், என் நண்பர்கள் சிலர் பெரிய கம்பெனிகளில் கிடைத்த வேலையை உதறிவிட்டு, சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து எனக்கும் மனமாற்றம் ஏற்பட்டதோடு, மகேஸ்வரன் தனது சொந்த காலில், தனது  சொந்தத் தொழில் செய்ய முடிவெடுத்துள்ளார். கரூர் நகரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க இப்படி ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையைச் செய்ய முயன்று வருகின்றார். மேலும், `தாத்தா, அப்பா செய்யும் காய்கறி வியாபாரத்தையே ஸ்மார்ட்டாகச் செய்வோம்’ என்று முடிவெடுத்த மகேஸ்வரன்  படிக்கும் காலத்திலேயே விடுமுறை நாள்களில் அவரது தந்தை ஜெகதீஸ் உடன்  மார்க்கெட்டுக்கு வந்திருக்கின்றார். அதனால் கொஞ்சம் அனுபவம் இருந்துள்ளது. இந்தத் தொழில் பற்றி ஓரளவு ஐடியாவும் இருந்த நிலையில், ஊட்டி, மேட்டுப்பாளையம், பாலக்கோடு, ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர், பெங்களூரு ஆகிய இடங்களில் காய்கறிகள் வாங்கி வந்து, மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!
online vegetables sales
online vegetables sales

முதலில் தொழில் கொஞ்சம் புரிபடாமல் போக்குக் காட்டிய நிலையில், அசராத மகேஸ்வரன், நிதானமாக வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். மெள்ள மெள்ள வியாபார சூட்சுமம் புரிபட ஆரம்பித்த நிலையில், கரூரில் மட்டும் இயங்கிவரும் ஃப்ளையர் ஈட்ஸ், டெலிவரி ஸ்டார், ஜெமேட்டோ, ஸ்விக்கி  ஆகிய உணவு டெலிவரி ஸ்டார்ட் அப்  கம்பெனிகளை  அணுகியுள்ளார்.  அவர்களின்  ஆப் மூலமாக தரமான  காய்கறிகளையும்  டோர் டெலிவரி  செய்யலாம்  என்பதைச் சொல்லாமல் சொல்லி தற்போது கரூரை கலக்கி வரும் மகேஸ்வரன்.,  கரூரில் அதுவரை இப்படி  ஆப் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்படவில்லை என்று கருதி  இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் நம்பிக்கையுடன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் மக்களும்  ஒப்புக்கொண்டுள்ளனர்.  

ஆப்களில் காய்கறி வியாபாரத்துக்கு என  தனி  டிசைன்களை  டெவலப் செய்து தந்த நிலையில்,. உணவுப் பொருள்கள் தொடர்பான விலைப்பட்டியல் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே அளவில் இருக்கும். ஆனால், காய்கறி விலைப் பட்டியல் நாளுக்கு நாள் மாறும் என்பதால், வாடிக்கையாளர்கள் இதற்கு ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் வரவே, முதலில் வெறுமனே ட்ரையல் மட்டுமே பண்ணியுள்ளார். ஆனால் வாடிக்கையாளர்களிடம் கிரீன் சிக்னல் கிடைத்தது. முழுவீச்சுடன் ஆப் மூலமாக காய்கறி விற்பனையைத் தொடங்கியுள்ளார். மேலும், இவர் முதல்தரமான காய்கறிகளை மட்டுமே ஆப் மூலம் விற்பனை பண்ணத் தொடங்கிய நிலையில்., ஆரம்பத்தில் தினமும் அதிகபட்சம் 20 கிலோ வரை காய்கறிகளை விற்பனை செய்ய முடிந்தது.

தரமான காய்கறிகளைத் தந்ததால், மெள்ள மெள்ள வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இப்போது தினமும் 150 ஆர்டர்கள் வரை கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. தினமும் 100 கிலோ வரை காய்களை ஆப் மூலமாக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றார். தினமும் 22 ஹோட்டல்களுக்கு நேரடியாக காய்கறி சப்ளை செய்துவரும் நிலையில், கரூரில் யாரும் கொடுக்காத செல்லரி லீக்ஸ், உரித்த பூண்டு, ஐஸ்பெர்க், ஸ்ப்ரிங் ஆனியன், பாஸ்லி, லெட்டியூஸ் என சைனீஸ் காய்கறிகளை ஊட்டி, பெங்களூரிலிருந்து வாங்கி வந்து குறைந்த விலைக்குத் தருகிறேன். காய்கறிகளை மார்க்கெட் விலையைவிட கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைவாக ஆப்கள் மூலம் விற்பனை செய்கிறேன்.

ALSO READ:  திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

அதனாலும், எனக்கு கஸ்டமர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறார்கள். எல்லாச் செலவுகளும் போக மாதம் ரூ.25,000 வரை லாபம் கிடைக்கிறது. இது குறைவாகத் தெரிந்தாலும், குறுகியகாலத்திலேயே நான் இந்த லாபத்தை எட்டியதால் பலரும் பாராட்டுகிறார்கள்.

online vegetables sales
online vegetables sales

கரூர் நகரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க இப்படி ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையைச் செய்ய முயன்று வருகிறேன். அதேபோல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, கீரைகளையும் ஆப் மூலமாக விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய இலக்குகள் வைத்திருக்கும், இளைஞர் மகேஸ்வரன்.,  ஸ்மார்ட் வழியில் கடின உழைப்பைச் செலுத்தினால், அத்தனை இலக்குகளையும் இலகுவாக அடைய முடியும்” என்கின்ற வழியை சுலபமாக உணர்த்தியுள்ளார்.

மேலும், இவரது இந்த ஆப் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் காய்கறி பிஸ்னஸ் என்பது கொரோனா காலத்தில் பலதரப்பு மக்களுக்கு மிகுந்த நன்மை அடைய வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும்., வழக்கமாக நாம் செய்யும் தொழிலில் டெக்னாலஜியைப் புகுத்தினால், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இந்த இளைஞர்! (இவரது தொடர்பு எண் 9629699473)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories