December 6, 2025, 12:22 PM
29 C
Chennai

ஆன்லைனில் உங்கள் குழந்தைகள் பாடம் கற்கிறார்களா? ஆபாச விளம்பரங்களிலிருந்து காக்க இத பண்ணுங்க! சேலம் காவல் துறை!

child

சேலம் மாநகர காவல் துறை சார்பில் செல்போன் வாயிலாக பள்ளிக் குழந்தைகள் கல்வி கற்கும்போது, ஆபாச விளம்பரங்களைத் தடுத்து நிறுத்த, பெற்றோர் ‘பிளே ஸ்டோர் ஆப்’ மூலம் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை, பள்ளிக்கூடங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தலைத் தொடங்கியுள்ளன. பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் ஃபோன்’ வாயிலாக குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இணையதள வாயிலாக ஆபாச விளம்பரங்கள் பல, இடையே தோன்றி வருவதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் பள்ளி பாடம் படிக்கும்போது, தேவையில்லாத ஆபாசப் பட விளம்பரங்கள், அவர்களின் பால் மனதைக் கெடுக்கும் என்ற கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சேலம் மாநகரக் காவல்துறை சார்பில் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கி வருகின்றனர். ‘பெற்றோர்களின் அன்பான கவனத்துக்கு’ என்ற தலைப்பில், செல்போனில் வரும் ஆபாசப் பட விளம்பரங்களை எவ்வாறு பெற்றோர் தடுத்து நிறுத்துவது என்பது குறித்த விவரங்களைப் பதிவேற்றி, சமூக வலைதளங்கள் மூலம் சேலம் மாநகரக் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

selam police

சேலம் மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு ஆலோசனை:

“பெற்றோர்களின் கனிவான கவனத்துக்கு:

இனி, நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்பாடும், கேம் ஸ்கேனர், தீக்சா (Diksa), எம்.எக்ஸ். வீடியோபிளேயர் (Mx Videoplayer), இ.எஸ்.ஃபைல் மேனேஜர் (ES file manager) போன்ற ஆண்ட்ராய்டு செயலிகளையும், யூடியூபையும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக, செல்போனில் செய்ய வேண்டியவை;

‘பிளேஸ்டோரில்’ (Play store) சென்று அமைப்புகளில் (Settings) ‘Parent control’ option-ஐ ‘on’ செய்யவும். அதன் கீழே உள்ள ‘Apps and Games’- ஐ கிளிக் செய்து ’12+’ ல் டிக் செய்யவும். அடுத்ததாக ‘Films’-ஐ கிளிக் செய்து ‘U’ என்பதை ‘டிக்’ செய்யவும். அதேபோல் ‘YOUTUBE’ அமைப்புகளில் (settings) General -ல் ‘Restriction mode’- ஐ ‘On’ செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் ஸ்மார்ட்போனில், தேவையற்ற விளம்பரம், வீடியோ குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானதாக இருக்கும்”

இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரக் காவல் துறை சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படுத்தி வரும் இந்த விழிப்புணர்வு ஆலோசனைக்குப் பெற்றோர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து, பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories