தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona virus
corona virus

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் 2393 பேருக்கு குறைத்துவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 2393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,000ஐ தாண்டியது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,327ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 1,201ஆக   அதிகரித்து உள்ளது.

அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு  வீடுகளுக்குத் திரும்பி  உள்ளனர். இதை அடுத்து,  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதுவரை, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை அடுத்து, சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 153 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 

அதே நேரம், மதுரை மாவட்டத்தில் 257 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

மாவட்ட வாரியாக தொற்று நிலவரம்

corona jun
corona jun

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.