சுஷாந்தின் தோற்ற ஒற்றுமை! வைரலாகும் வீடியோ, புகைபடங்கள்.. யார் இவர்?

Published:

sushanth

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போலவே இருக்கிறார் என்று குறிப்பிட்டு சச்சின் திவாரி என்பவருடைய வீடியோக்களை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன் 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் எனவும் அதற்கு சில பாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

sushanth singh

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த பிறகு அவருக்கு இரங்கல் தெரிவித்து பலர் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்தனர்.

மேலும், சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்திவந்தனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. தில் பெச்சாரா, ஜூலை 24 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக கதாபாத்திரமான சஞ்சனா சங்கி கதாநாயகியாக நடித்துள்ளார்.

sushanth

இது ஒருபுறம் இருக்க, சச்சின் திவாரி என்ற நபருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையவாசிகளுக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவுபடுத்தியுள்ளது. சச்சின் திவாரி, மறைந்த நடிகர் சுஷாந்த் போலவே இருப்பதாக பலர் பதிவு செய்துவருகின்றனர். சச்சின் திவாரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பல வீடியோக்களில், “நீங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் போலவே இருக்கிறீர்கள்” என்று இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர். சச்சினுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் தற்போது வைரலாகிவருகிறது.

View this post on Instagram

Today I am very sad…..????

A post shared by Sachin Tiwari (@officialtiwarisachin) on

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img