மதுரையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மறைவு! சமூகத் தளங்களில் இரங்கல்!

Published:

ramu madurai
ramu madurai

மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே பல ஆண்டுகளாக குறைவான விலைக்கு சாப்பாடு வழங்கிய ராமு என்பவர் மறைந்துள்ளார்.

இவர், திருமங்கலம் அருகே வில்லூரைச் சேர்ந்தாலும், பல ஆண்டுகளாக, ஏழை மக்களும் பசியாற ரூ. 3..க்கு சாப்பாடு வழங்கி, கடந்த சில ஆண்டுகளாகத்தான், பெரியவர் ராமு, ரூ. 10..க்கு சாப்பாடு வழங்கி வந்தார்.

இவர் சாம்பார், ரசம், மோர் ஆகியவையும் காய் ஒன்றும் சாப்பாட்டுடன் வழங்கி வந்ததை யாராலும் மறக்கமுடியாது.
இவரை எல்லோரும் ராமு தாத்தா என, அன்போடு அழைப்பர். இவர் மறைந்தாலும், இவருடைய சேவையை யாரும் மறக்க மாட்டார்கள்.

madurai ten rupees food ramu
madurai ten rupees food ramu

நீண்ட நாட்களாக மிக குறைவான விலையில் நிறைவான உணவை வழங்கிய மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் ராமு தாத்தா தன் சேவையை முடித்து கொண்டு விடை பெற்றார். அவர் பெற்ற பிள்ளைகள் ஏழாக இருந்தாலும் அவரிடம் உணவு சாப்பிட்ட சாமனியர்கள் அனைவருமே அவரின் பிள்ளைகள்தான் என்பர். அவர் அருட் பெருஞ் ஜோதி தனி பெருங்கருணை வள்ளலார் வழியில் வாழ்ந்தார், நேற்று ஜோதியில் கலந்தார். அவர்க்கு அஞ்சலி செலுத்துவோம் நாமும்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img