அனுபம் கெர் தாயாருக்கு கொரோனா தொற்று: டிவிட்டரில் பிரபலங்கள் பிரார்த்தனை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
anupam kher and mother
anupam kher and mother

இந்தி நடிகர் அனுபம் கெரின் தாயார், துலாரி மற்றும் அவரது சகோதரர் ராஜு, மைத்துனர் மற்றும் மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளதாக அனுபம் கெர் கூறியுள்ளார்

நடிகர் அனுபம் கெர் தமது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டு, செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு அவர் தனது மருமகனுடன் சேர்ந்து சோதித்ததாகவும், அதில் நெகட்டிவ் என்று முடிவுகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

அனுபம் கெர் தனது ட்விட்டர் பதிவில் இந்த செய்தியைப் பகிர்ந்தவுடன், பாலிவுட் பிரபலங்கள் அவரது ட்வீட்டுக்கு பதிலளிக்கத் தொடங்கினர், அனுபம் குடும்பத்தினரை கடவுள் விரைவாக மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

அனில் கபூர் தமது ட்விட்டர் பதிவில் “#துலாரி அத்தை, # ராஜு மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை ! என்று எழுதினார்.

இதற்கிடையில், நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாக அறிவித்தனர். தந்தை மற்றும் மகன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவர்களின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர்களின் விரைவான மீட்புக்காக டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பிரார்த்தனைகள் முன்வைக்கப் பட்டு வருகின்றன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.