கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு!

Published:

udayakumar minister inspection
udayakumar minister inspection

மதுரை மாவட்டம் வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப கட்டட வளாகத்தில் அமையவுள்ள கோவிட் கேர் சென்டரை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய், தலைமையில்
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஆய்வு செய்து தெரிவிக்கையில்…

கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையிலே மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து
முதலமைச்சர் அறிவுரையின்படி தடுப்பு நடவடிக்கைப் பணிகளை முடிக்கவிட்டுள்ளார்கள்.

udayakumar minister inspection
udayakumar minister inspection

மாநகராட்சி ஆணையாளர் தளர்வில்லாத இந்த ஊரடங்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
மேலும் , மக்களுக்கோ மற்ற பணிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பில்லாமல் தனியாக கோவிட் கேர் சென்டர் அமைக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம்
முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img