சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
majordasan
majordasan

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

முன்னதாக கடந்த வாரம், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக்கட்டு ஏற்பட்டு ரத்த உறைதலால் வாதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சார்பில், திரை உலகினைச் சேர்ந்தவர்களிடம் சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டது.

இந்நிலையில், ஹிந்து மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் தாசன் இன்று பகல் மாரடைப்பில் காலமானதாக அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் நண்பர்கள், திரை உலகினர் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பி.ஆர்.ஓ.,வாகவும் நிருபராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய மேஜர் தாசன், திரையுலகினர் பலரது ஏற்றங்களுக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.