சௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi 4 - 2026

பிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும், அலுவலகமும் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியை, புதுப்பித்து மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொதுவான தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை அமைப்பது பற்றி திட்டமிடப்படுகிறது.

இதேபோல, குடியரசு துணைத் தலைவரின் இல்லத்தை நார்த் பிளாக் அருகிலும், பிரதமரின் இல்லத்தை சவுத் பிளாக் அருகிலும் மாற்றுவது குறித்தும் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், விஐபிகளின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது.

பிரதமரின் இல்லத்தையும், அலுவலகத்தையும் நடந்துசெல்லும் அளவுக்கு அருகருகே அமைத்தல், சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக்கை அருங்காட்சியகங்களாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.