செங்கோட்டையில் திரைப்பட நடிகா் அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து திரைப்பட நடிகர் அஜீத்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை நகர அஜீத் நற்பணி இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் வழங்கும் நிகழச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு சித்த மருத்துவர் டாக்டா் கலா தலைமைதாங்கினார். நற்பணி மன்ற நகரத்தலைவா் சூர்யா, குற்றாலம் நகரத்தலைவா் அஜீத்கண்ணன், துணைத்தலைவா்கள் இளங்கோ, தீனாசெல்வா, செயலாளா் விக்னேஷ்,பொருளாளா் அருண், துணைத்தலைவா் இளங்கோ, துணைச்செயலாளா் பாலாஜி, துணைப்பொருளாளா் மகேஷ் ஆகியோர் முன்னிலைவகித்தனா். செயற்குழு உறுப்பினா் ராகுல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சின்னத்துரை, பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார். பின்னா் சித்தமருத்துவா் டாக்டா் கலா கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு பொதுநுாலகம் நல்நுாலகா் ராமசாமி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் சமூக ஆர்வலா்கள் ராஜீவ்காந்தி, முத்துக்குமார், சிவக்குமார், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செயற்குழு உறுப்பினா் ஆனந்த் நன்றி கூறினார்.