தூத்துக்குடிக்குச் சென்ற கமல், விதிகளை மீறி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்றார். இதனால், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார்.
அப்போது, 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்று 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




