
சபரிமலை நிறைபுத்தரி பூஜை நாளை காலை நடைபெறுகிறது. அதனை அடுத்து அச்சன்கோவில் சபரிமலை நிறைபுத்தரி யாத்திரை குழுவின் சார்பாக வழங்கப் படும் நெல் கதிர்கள் வழங்கப் பட்டன.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் தமிழக கேரள எல்லையான கோட்டைவாசல் செக்போஸ்டில் வைத்து இவை வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த வருடம் கொரோனா பிரச்சனை காரணமாக இங்குள்ள வயல்களில் நெற்பயிர் பயிரிடாத காரணத்தினால் தஞ்சாவூரிலிருந்து நெல்கதிர்கள் வரவழைக்கப் பட்டன.
அச்சன்கோவில் திருவாபரணப் பெட்டி கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் தலைமையில் தென்காசி அக்ரோ பாபு மன்னார்குடி குருமூர்த்தி ஆகியோர், திருக்கோவில் ஊழியர்கள் ப்ரமோத், முருகன், முன்னாள் கோவில் கமிட்டி தலைவர் சத்தியசீலன் ஆகியோரிடம் இந்த நெற்கதிர்களை வழங்கினார்கள்.