தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்தால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதனால், பலரும் போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தைக் கண்டு களித்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஐசிஎஸ் என்ற இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்ஸின் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு கலக்கு கலக்கி விட்டனர்.

இதனை ஷெரில் ஜி.காடவன், அன்னா ஜார்ஜ் இருவரும் வடிவமைத்துள்ளனர்.
வினித் ஸ்ரீனிவாசன், ரெஞ்சித் உன்னி ஆகியோர் பாடிய இந்தப் பாடலை ஷான் ரெஹ்மான் இசையமைத்திருந்தார். இது கேரளத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. அதுவும் குறிப்பாக, ஓணம் பண்டிகை வேறு வந்ததால், அதனை முன்னிட்டு இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவிகள் நடனமாடி, இந்த வீடியோவை யுடியூப்பில் ஏற்றினர். முதல் இரு நாட்களில் 5 லட்சம் பார்க்கப்பட்ட இந்தப் பாடலை பலரும் பகிர்ந்து கொண்டதில், ஒரு வாரத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.

அதுமட்டுமல்ல… இந்தப் பாடலில் முன்னணியில் இருந்து நடனமாடும் இரு பெண்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டார்கள் பேஸ்புக்கிலும் பரவலாக இந்த லிங்க்கள் பகிரப் படுகின்றன.  இதானு ஜிமிக்கி கம்மல் பொலிக்கடுக்கி இண்டயான் ஸ்கூல் ஓஃப் காமல்ஸிலே சுந்தரிகளும் சுந்தரன்மாரும் என்று தலைப்பிட்டு இவர்கள் வெளியிட்ட இந்த வீடியோ 12 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது….

https://www.youtube.com/watch?v=PtKeZ68CDZY

 

இந்தப் பாடலுக்கு நடனமாட ஒத்திகை பார்த்து, அதையும் ஒரு வீடியோவாகப் பதிவிட்டுள்ளனர். கேரளாவில் கூட இத்தனை ஹிட் அடிக்காத இந்த ஜிமிக்கி கம்மல் பாடல் இப்போது தமிழர்களின் கீதமாக மாறிவிட்டது என்பதுதான் இதில் சுவாரஸ்யம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.