ஷூ அணிந்த கால்… கூப்பிய கை! திராவிட பகுத்தறிவு ஸ்டைல்! அண்ணாதுரைக்கு எம்பி., மரியாதை!

Published:

danushkumar-mp-annadurai
danushkumar-mp-annadurai

இன்று திமுக., எனும் அரசியல் இயக்கத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 112வது பிறந்த நாள், திராவிட இயக்க கட்சியினரால் கொண்டாடப் பட்டது.

திராவிடர் கழகம் எனும் நாத்திக இயக்கத்தில் இருந்து வெளியேறி, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்து, தனது பிரசார யுக்திகளாலும், இளைஞர்களை கவர்ந்திழுத்த பேச்சாலும் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்தார் அண்ணாதுரை.

mps-in-parliament
mps-in-parliament

பின்னாளில் மு.கருணாநிதியின் குடும்பச் சொத்தாக திமுக.,வினை தாரை வார்த்துக் கொடுத்த அண்ணாதுரையின் பிறந்த நாளை திமுக., மற்றும் அதிலிருந்து பிரிந்த அண்ணா திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். 1969க்குப் பின்னர் காங்கிரஸ் என்ற தேசிய எண்ணம் கொண்ட கட்சியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, தொடர்ந்து திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சிக்கு வித்திட்டவர் அண்ணாதுரை. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதற்குக் காரணமானவர் அண்ணாதுரை.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
mps-in-parliament1
mps-in-parliament1

செப்.15 இன்று அவரது பிறந்த நாளில் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக., திமுக., கட்சிகளின் எம்.பி.க்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு பகுத்தறிவின் பாற்பட்டு, ஷூ அணிந்த கால்களுடன் திராவிட இயக்க ஸ்டைலில் மரியாதை செலுத்தினார்!

Related articles

Recent articles

spot_img