பல்லாண்டுகள் ஆன பிரச்னைகளுக்கு… பிரதமர் மோடி தீர்வு!

இந்தியா சற்றுமுன்
pm-fund
pm-fund

பல்லாண்டுகளாக உள்ள பிரச்சனைகளுக்கு பிரதமர் நிவாரணம்.

செப்டம்பர் 17 அன்று வர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வாரம் சேவா சப்தாஹம் என்ற பெயரில் சேவை நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஆந்திர மாநில பிஜேபி தலைவர் தக்குபாடி புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை ஓங்கோல் நகரத்தில் மாமிடிபாலம் என்ற இடத்தில் திங்களன்று அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பலருக்கும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், ஆசிரமத்தில் இருக்கும் முதியோர்களுக்கு பழங்கள் பகிர்ந்தளித்தார். அதன்பிறகு அவர் பேசுகையில் நாட்டில் பல்லாண்டுகளாக இருக்கும் பிரச்சனைகளுக்கு பிரதம மந்திரி நிவாரணம் காட்டியுள்ளார்.

உலகிலேயே இந்திய நாட்டை முதன்மை இடத்தில் நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார் என்று புகழ்ந்தார். இந்த மாதம் 20 ம் தேதி வரை சேவை நிகழ்ச்சிகள் தொடரும் என்று பிஜேபி கட்சி ஓங்கோல் பார்லிமென்ட் தலைவர் சிவசனகள்ள சீனிவாசுலு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் சித்தா வெங்கடேஸ்வர ராவு, சீனிவாசராவு, கொம்மி நரசிம்மராவு, உம்மிடி செட்டி நாகேஸ்வர ராவு, கனுமர்ல ராகவராவு மற்றும் பலர் பங்கு கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nineteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.