
தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,735 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,58,900 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 485 பேருக்கும், சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டில் 324 பேருக்கும், திருவள்ளூரில் 283 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 198 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் விவரம்…
