திருமா., மீது தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக., ஐடி., பிரிவு புகார் பதிவு!

Published:

thirumavalavan
thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் நம்பிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மீது, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் திரு.தொல் திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் அனைத்து இந்து பெண்களும் சனாதன தர்மத்தின் படி விபச்சாரிகள் என்று கூறினார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மகளிர்கள், பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இது தொடர்பாக திருமாவளவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆ. நம்பிராஜன் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img