கோவை: முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் எங்கே? மூலப் பத்திரத்தின் நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் – ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறி குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக திமுக தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்ட நிலையில் முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் இன்று, கோவையில் ராமநாதபுரம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் முரசொலி அலுவலக கட்டிடத்தின் படத்துடன், பஞ்சமி நிலமான முரசொலி அலுவலக கட்டிடத்தின் மூலப்பத்திரம் எங்கே? மூலப் பத்திரத்தின் நகலை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவரது பெயரில் அலைபேசி எண்ணுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன…