சர்வதேச திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழி திரைப்படம்!

jeyaram
jeyaram

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’ திரையிடப்படுகிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’. இதில் கோலிவுட்டில் கமலுடன் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் விஜேஷ் மணி.
விஜேஷ் மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்.

இதுவரை, மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், இருளா மொழியில் ஒரு படம் மற்றும் குரும்பா மொழியில் ஒரு திரைப்படம் என ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
.
இவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி அதற்காக கின்னஸ் புத்தகம், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியனவற்றில் இடம்பெற்று புகழைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.விஜேஷ் மணியின் முதல் திரைப்படம் ‘விஸ்வகுரு’. இது மலையாளத் திரைப்படம். இத்திரைப்படத்தை மெடிமிக்ஸ் நிறுவன உரிமையாளர் அனூப் தயாரித்தார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இத்திரைப்படத்தை விஜேஷ் மணி 51 மணி நேரத்தில் கதை எழுதிப் படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து விளம்பரப்படுத்தினார். இத்திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.அதனைத் தொடர்ந்து 2017ல் ‘புழயம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தைக் கோகுலம் கோபாலன் தயாரித்தார். இத்திரைப்படம் சிறந்த சுற்றுச் சூழல் விழிப்புணர்வுத் திரைப்படமாக அறியப்பட்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது.

இப்படம் முழுவதுமே ஆற்றிலேயே நடப்பதுபோல் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது இதன் தனிச் சிறப்பு. மூன்றாவதாக 2018ல் இருளா மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். ‘நேதாஜி’ எனப் பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தை ஜானி குருவில்லா தயாரித்தார். இந்தத் திரைப்படம் இந்தியன் பனோராமாவுக்குத் தேர்வானது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இதேபோல் ‘குரும்பா’ என்று யாரும் அறிந்திராத மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சோஹன் ராய் தயாரித்திருக்கிறார். ‘ம்ம்ம்’ என்பதுதான் இத்திரைப்படத்தின் பெயர். படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் விஜேஷ் மணி.

இத்திரைப் படம் ஆஸ்கர் தேர்வுக்கான திரையிடலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இயக்கியுள்ள சமஸ்கிருத மொழித் திரைப் படம் ‘நமோ’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 22.01.21 அன்று திரையிடப்படுகிறது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories