மார்வாடி பெண்களை அசிங்கமாய் கேலி செய்த கருணாநிதி: ஆர் சுந்தர்ராஜன்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
karunanidhi 96
karunanidhi 96

பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதி-ஸ்டாலின் – உதயநிதி பற்றி அவர் பேசிய பேச்சுதான் இன்றைக்கு இணையங்களில் பரபரப்பாக இருக்கிறது.

”கருணாநிதி எவ்வளவு கேவலமான ஆள் என்பதைப் பற்றி சொல்கிறேன். மணிவண்ணன் எடுத்த படத்தில், மார்வாடி பெண்களை வைத்து பாடல் எடுக்க வேண்டும் என்று கருணாநிதி எழுதிக்கொடுத்திருக்கிறார். அதுமாதிரியே மணிவண்ணும் பாடலை எடுத்துக்காட்ட, கருணாநிதி சிரிக்கிறார்.

என் படங்களில் பாடல்கள் நல்லா இருக்கும் என்பதால் என்னையும் கூப்பிட்டிருந்தார் மணிவண்ணன்.

sundarajan
sundarajan

சிரித்த கருணாநிதி, ”என்னா மணிவண்ணன் எடுத்திருக்கீங்க?”என்று கேட்டார். உடனே மணிவண்ணன், ”நீங்கதான ஐயா மார்வாடி பெண்களை வச்சு சாங் எடுக்கணும்னு சொல்லி இருந்தீங்க..” என்று இழுக்க, ”மார்வாடி பெண்களை வச்சுத்தான் சாங் எடுக்கச்சொன்னேன். நீ மார் வாடிய பெண்களை வச்சு எடுத்து வச்சிருக்கியே” என்று சொன்னார் கருணாநிதி”என்றவர்,

”நான் போகுற ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒரு டிடி ஆரை தேடிக்கிட்டு இருக்குறேன். திருட்டு ரயிலில்தான் சென்னை வந்தேன் என்று கருணாநிதி சுயசரிதையில் சொல்லி இருக்கிறார். அந்த ரயிலில் வந்த டிடிஆர் மட்டும் விழிப்போடு இருந்து கருணாநிதியை ரயிலை விட்டு இறக்கி விட்டிருந்தால் இன்றைக்கு தமிழ்நாடு தப்பியிருக்கும். அதைச்செய்யததால் அந்த டிடிஆரை தேடிக்கிட்டு இருக்குறேன். கையில் கிடைச்சா செத்தான்”என்றார் அதிரடியாக.

”எங்க அப்பாவை முதல்வர் ஆக்குவேன்னு உதயநிதி சொல்லிக்கிட்டு இருக்கான். அதை அவரோட அப்பாவினாலேயே செய்ய முடியல. முதல்ல உருப்படியா கதை கேட்டு நடிக்கணும். இன்னும் நடிக்கவே தெரியல”என்று உதயநிதி ஸ்டாலினை சாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.