காந்தி சிலை அரசியல்! ஜோதிமணி எம்.பி.யை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
gandhi-statue-karur1
gandhi-statue-karur1

காந்தி சிலையை அவமதித்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் காந்திசிலை விவகாரத்தில் ஜோதிமணி காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் காந்தி சிலையின் பீடத்தை குச்சி வைத்து குத்தி எடுத்து உள்ளார்… இது எந்த விதத்தில் நியாயம் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் சிறிதாக இருந்த காந்தி சிலை எடுக்கப்பட்டு புதியதாக 6 அடி அளவில் புதிய வெங்கல காந்திசிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு எந்த விதமான தகவலும் சொல்லாமல் சிலை அமைக்கும் பணி நடைபெறுவதாகக் கூறி கருர் காங்கிரஸ் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி ஜோதிமணி உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் பாஜக.,வினர் ஊர்வலமாக வந்து காந்தி சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மோர் வழங்கி உற்சாகப் படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி இந்த சிலை விவகாரத்தில் ஜோதிமணி அரசியல் உள் நோக்கத்துடன் செயல் படுகிறார். அவர் இங்கு பழைய காந்தி சிலை இருந்த போது அதை சுத்தம் செய்யக்கூட வந்த தில்லை. இங்கே இருந்த காந்தி சிலையை சுத்தம் செய்யவோ மாலை போடவோ காங்கிரஸ், திமுகவினர் யாரும் வரவில்லை

gandhi-statue-karur
gandhi-statue-karur

ஆனால் இப்போது தமிழக அரசு சிறப்பான முறையில், 6 அடி உயரமுள்ள காந்தியின் வெண்கல சிலை அமைத்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் காங்கிரஸார் நடந்து கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.