உலகின் வலிமையான இராணுவ பட்டியல்! நாலாவது இடத்தை பிடித்த இந்தியா!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Army - 2026

உலகின் மிக வலிமையான ராணுவ சக்தியை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்டரி டைரக்ட் உலகின் மிக வலுவான ராணுவ சக்தியை கொண்டுள்ள நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவத்திற்கான பட்ஜெட் திட்டங்கள், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வான்வழி, கடல், நிலம் மற்றும் அணு வளங்கள், உபகரணங்களின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, இறுதி ராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் அடிப்படையில், உலகின் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா குறியீட்டில் 100க்கு 82 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

அமெரிக்கா 74 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரஷ்யா 69 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், பிரான்ஸ் 58 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.

மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 732 பில்லியன் அமெரிக்க டாலருடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. 261 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.