மக்கள் வெள்ளத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

Published:

madurai saravanan - 2026

மதுரை: மதுரை வடக்கு தொகுதி பாஜக., அதிமுக., கூட்டணி வேட்பாளர் டாக்டர் சரவணன், மத்திய அரசின் திட்டங்களை பெற்று தருவேன் எனக் கூறி மக்கள் வெள்ளத்தில் மதுரை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சரவணன் கூறி வாக்கு சேகரித்தார்*.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மா காந்தி நகர், மருதுபாண்டியர் நகர், பி.பி.குளம், நரிமேடு, தென்றல் நகர் ,காட்டு பிள்ளையார் கோவில் தெரு, பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமான நெசவாளர்கள் கைத்தறி தொழிலை நம்பி உள்ளனர்.

இந்த தொழிலை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு இந்த பகுதியில் உள்ள நெசவாளர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் சால்வை அணிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அப்போது பேசிய டாக்டர் சரவணன் , நான் இப்பகுதியில்தான் மருத்துவமனையை நடத்தி வைத்து நடத்தி வருகிறேன். எனது மருத்துவமனை மூலம் ஏராளமான சேவையும் செய்து வருகிறேன். ஒரு மருத்துவராக அல்லாமல் ஒரு மனித நேயமுள்ள ஒருவனாகவும் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். இது உங்களுக்கே தெரியும். எனவே நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தரவேண்டும் என உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

Related articles

Recent articles

spot_img