ஆட்சிக்கு வருவதாகக் கூறி அராஜகம்! எஸ்.ஐ., மீது திமுக., பிரமுகர் தாக்குதல்!

Published:

krishnagiri sp office - 2026

திமுக பிரமுகரின் அராஜகம் ஆட்சிக்கு வரும் முன்னே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரன் பட்டியில் திமுக. அதிமுக இடையே வாய்தகராறு… இதில் தடுக்கச் சென்ற சிங்காரப்பேட்டை உதவி ஆய்வாளர் மீது தாக்குதல். படம்பிடித்த காவலர் செல்போனை பறித்த திமுக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் ஊத்தங்கரை சேர்மன் கணவர் குமரேசன். ஊத்தங்கரை டிஎஸ்பி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரம்பட்டியில் இரவு முழுவதும் தேடியும் திமுக முக்கிய நபர்கள் சிக்காத நிலையில், காவலர் தாக்கப்பட்ட விசயத்தில் 9 பேர் கைது செய்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை.

தமிழக காவல் துறை எஸ்.ஐ. தாக்கப்பட்டு.காவலர் செல்போன் பறிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீது பெயிலில் செல்லகூடிய வகையில் வழக்கு பதிவு செய்தது ஏன்? காவலர்களுக்கு காவல் காவல்நிலையம் இல்லையோ. திமுகவிற்கு அஞ்சி வழக்கு பதிவா?

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இது சம்பந்தமாக கிருஷ்ணகிரி எஸ்.பி . உரிய நடவடிக்கை எடுப்பாரா என ஏக்கத்தில் உள்ளனர் சக காவலர்கள்.

Related articles

Recent articles

spot_img