பெண்ணுக்கு இடம் கொடுத்த கட்சிகள்! ஆனால்… எத்தனை இடம் தெரியுமா?

Reporters Diary அடடே... அப்படியா? சற்றுமுன்

kanimozhi thamizisai - 2026

அரசியல் கட்சிகளின் கொள்கை முழக்கங்களில் ஒன்றாக இருப்பது, பெண்ணுரிமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கான இடம் என!

தற்போதைய மத்திய அரசில் முக்கியத் துறைகளை கவனிக்கும் அமைச்சர்கள் பெண்கள்தான்! ஆயினும் பாஜக., சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் எண்ணிக்கையில் இல்லைதான்!

இது காங்கிரஸிலும் அப்படியே! தேசிய அளவு என்று இல்லை, மாநில அளவிலும் மாநிலக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப் படும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அப்படி இப்படித்தான் இருக்கும். காரணம், வெற்றிதான் முக்கிய இலக்கே ஒழிய, கொள்கை இல்லை என்பது இக் கட்சிகளின் கொள்கை முழக்கமாக இருக்கும்

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை விவரத்தை ப் பார்த்தால் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்ன என்பது நமக்குத் தெரியவரும்.

அதிமுக – 20 தொகுதியில் போட்டியிடுகிறது – 1  பெண் வேட்பாளர்
திமுக – 20 தொகுதிகளில் – 2 பேர் பெண்கள்
பாஜக. – 5 தொகுதியில் – 1 பெண் வேட்பாளர்
அ ம முக – 39 தொகுதியில் – 3 பேர் பெண்கள்
காங்கிரஸ் – 10 தொகுதியில் – 1 பெண் வேட்பாளர்
நாம் தமிழர் – 40 தொகுதியில் – 20 பேர் பெண்கள். நாம் தமிழர் 50 சதவீத பிரதிநிதித்துவம் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பதாகக் கூறுகிறது. 

ஆனால், வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனுப்பினால்தான், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ விகிதம் முன்னர் விவாதித்தபடி 33 சதவீதமாவது வரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.