கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

Reporters Diary அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்

tiruchendur kaniozhimother - 2026கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்காக ஆரத்தி எடுத்தபோது போட்ட பணம், கோயிலில் காணிக்கை செலுத்திய பணம், உண்டியலில் போட்ட பணம், ஐயர் அர்ச்சனைத் தட்டில் போட்ட பணம் இதை எல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி.veeramani tweet - 2026

திக.,வீரமணி இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட கருத்தில், பிரியாணி பொட்டலத்தைக் கூட தேர்தல்செலவுக் கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம், ஜோதிடம், யாகம் முதலியவைகளுக்கு செய்யப் படும் செலவைக் கணக்கில் சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

tiruchendur kaniozhimother2 - 2026

குறிப்பாக, கனிமொழி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக ஏறிச் சுற்றி வருகிறார் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள். கனிமொழிக்காக வேண்டிக் கொண்டு, அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை செலுத்தினார். அவருக்காக சிறப்பு அர்ச்சனை பூஜைகளை செய்தார். மேலும், ஆலயத்துக்கு வருவோர் மனம் வைத்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனைத் தட்டில் காசு போட்டார்.

மேலும், சென்னையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாள ஜோதிடரை குடும்ப ஜோதிடராகக் கொண்டுள்ள ராசாத்தி அம்மாள், கனிமொழிக்காக வெற்றிபெறும் வாய்ப்பு, மனு தாக்கல் நேரம், பிரசாரம் துவக்க நேரம் இவற்றை எல்லாம் கணித்து பெற்று வந்தார். tiruchendur kaniozhimother3 - 2026

இவற்றை எல்லாம் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் திக., வீரமணி, இதனை மனத்தில் கொண்டு, யாகம், ஜோதிடம் இவற்றுக்கு செலவு செய்வதையும் தேர்தல் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இது திமுக.வுக்கும் திக.வுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது.

கனிமொழிக்காக.. ஆரத்தி எடுக்க வரும் பெண்களுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம், ரூ. ஆயிரம் ஐநூறு என்று எடுத்துவிடும் அனிதா ராதாகிருஷ்ணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.