தமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி!

Published:

train
train

தமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா? என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது:-தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரயில்வேக்கு, ரயில்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை. எனவே தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரயில்களும் முழுமையாக இயங்கும் என்றார்.

Related articles

Recent articles

spot_img