spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கோவாக்சின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு? பின்னுள்ள ‘செய்தி’ அரசியல்!

கோவாக்சின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு? பின்னுள்ள ‘செய்தி’ அரசியல்!

- Advertisement -
joe-biden-and-kamala-harris
joe-biden-and-kamala-harris
  • செல்வ நாயகம்

தீர விசாரிப்பதே மெய்! “கோவாக்ஸினுக்கு அமெரிக்க FDA அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (emergency use authorization EUA) அனுமதி மறுப்பு” என இந்திய ஊடகங்களில் இன்று தலைப்புச் செய்திகளில் குறிப்பிட்டாலும், கட்டுரையின் உள்ளே பார்த்தால், “நாங்கள் EUA அனுமதி கோரினோம். ஆனால் FDA எங்களை முழு அனுமதிக்கான (full approval) உரிம விண்ணப்பம் (biologics license application BLA) சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

அதாவது, அவசரகால அனுமதி தேவையில்லை, முழு அனுமதி கிடைக்க வாய்ப்பு! என்பதே இந்தச் செய்தியின் சாராம்சம்.

அதுசரி… கோவாக்ஸின் என்றால் ஏன் இந்திய ஊடகங்களுக்கு அத்தனை கடுப்போ? அடுத்து… ஃபைசர் – மாடர்னா உபயோகிப்பால் பல சிக்கல்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன அமெரிக்காவில்! எனவே, அவசரகால கூட்டம் கூட்டுகிறது அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் (Centers for Disease Control and Prevention CDC). இதை இந்திய ஊடகங்களில் இருட்டடிப்பு செய்துவிடுவார்கள். இது குறித்த செய்திகள் எதுவும் இந்திய ஊடகங்களில் வெளியாகாது.

“இவர்கள் நமக்கு தடுப்பு மருந்து தராமல் அவர்களே உபயோகித்துக் கொள்கிறார்கள்” என பல நாடுகளும் குற்றம் சாட்டியதை அடுத்து,  “2022க்குள் ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பு மருந்து இலவசமாகத் தருவோம்” என பணக்கார ஜி-7 (7 நாடுகள் கூட்டமைப்பு) கூறியிருக்கிறது.

அதில் சிறப்பம்சம்: 500 மில்லியன் தடுப்பு மருந்துகள் அமெரிக்காவிலிருந்து வரப் போகிறதாம்.

“எலி ஏன் கோவணத்தோட…. ” என்ற கேள்விக்கு பதில், “கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவும் காரணம்” என்ற செய்தி பரவியதை அடுத்து, தன் பெயரை “சுத்தம்” செய்து கொள்ள, 500 மில்லியன் தடுப்பு மருந்துகள் லஞ்சமாகக் கொடுக்கப் போகிறது என்பதே இதன் பின் ஒளிந்துள்ள செய்தி.

அப்படியே கொடுத்தாலும்…. அவற்றை – குறிப்பாக ஃபைசர் மருந்துகளைக் கையாள மிகக் குறைந்த வெப்பநிலை தேவை. அது தவிர அம்மருந்துகளால் (ஃபைசர் / மாடர்னா) எவரும் உயிரிழந்தால் இழப்பீடு தரப்படமாட்டாது! என்பது இதன் பின்னுள்ள கண்டிஷன்கள். அடடே… மிஸ்டர் பிடன்… இதற்கு நீங்க இந்த மருந்தை கொடுக்காமலேயே இருக்கலாம் என்றுதான் குரல்கள் எழும்பியிருக்கின்றன.

இருந்தாலும், ஃபைசர் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. காரணம், இந்த மருந்துக்கான விலையை அமெரிக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து ஃபைசருக்கு கொடுப்பார்கள், பைடனும் ஹாரிசும்! இந்தியா கொடுப்பதையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் இவர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள ‘லஞ்ச’ அரசியல்!

US FDA rejects Ocugen’s EUA application for Bharat Biotech’s Covaxin

Ocugen said the decision was based on a recommendation from the US FDA, which also requested more information and data for full approval.

https://www.moneycontrol.com/…/a-history-of-blood-clots…

Nearly 800 Reports of Heart Inflammation After COVID-19 Vaccination in US: The bulk of the reports described heart inflammation appearing after the second of two doses of either the Pfizer of Moderna vaccines, both of which utilize messenger RNA technology.

https://www.theepochtimes.com/nearly-800-reports-of-heart…

G7 leaders to pledge 1bn Covid-19 vaccine doses for poorer countries

https://www.ft.com/…/000e6968-8ae4-4f00-9cb5-324b98aa779b

Biden admin will buy 500 million additional doses of the Pfizer/BioNTech #COVID19 vaccine and donate it to the world.

The move comes ahead of Biden’s intelligence report on the origins of the #COVID19 pandemic and amid controversy over possible U.S. funding of gain-of-function research in Wuhan.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe