ஹால்மார்க் முத்திரை: அமலுக்கு வந்தது புதிய விதி!

அடடே... அப்படியா? இந்தியா வணிகம்
gold shop - 2026
gold

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்தது.

தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்… என்கிறது இந்த விதி.

இந்த புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப் படுத்துவது என 2019ம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.