உடற்பயிற்சியின் நடுவில் எழுந்து ஆடிய கிரிக்கெட் வீரர்! வைரல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் விளையாட்டு
shereyas iyar - 2026

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடற்பயிற்சியை விட்டு எழுந்து ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு பல நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் இவர் உடற்பயிற்சியை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியிருக்கிறார். இதனால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.