அதிர்ஷ்டம்னா இதான்… கிணறு தோண்டும் போது கிடைத்த நீலக்கல்… மதிப்பு ரூ.175 கோடி!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

stone in well - 2026

வீட்டுக் கொல்லையில் கிணறு தோண்டும்போது ரூ175 கோடி மதிப்புள்ள நீலக்கல் கிடைத்தது. அதிர்ஷ்டம் என்றால் இதுதான்…

ஒரு பெரிய கல்லில் பல சின்னச் சின்ன இந்திரநீல கற்கள் இருந்தன. இதனை நிபுணர்கள் சபையர் கிளஸ்டர் (நீல மணிக் கொத்து) என்றழைக்கிறார்கள்.

இந்த நீலக்கல் 510 கிலோ (2.5 மில்லியன் கேரட்டுகள்) எடையுள்ளது.

உலகிலேயே இப்போது வரை கிடைத்த நீல கற்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு வெளிமார்க்கெட்டில் சுமார் 745 கோடி ரூபாய்கள் (100 மில்லியன் டாலர்கள்) இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

இது எங்கு… எவ்வாறு கிடைத்தது என்று பார்த்தால்… ஸ்ரீலங்காவில் மணிகளும் ரத்தினங்களும் அதிகமாக கிடைக்கும் இடமான இரத்தினபுரியில் உள்ள ஒரு ரத்தின வியாபாரியின் வீட்டுக் கொல்லையில் கிடைத்தது. இதற்கு எதிர்பாராமல் கிடைத்த நீலக்கல் (செரெண்டிபிடி சஃபையர்) என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

பூமியின் அடியில் அரிதான கற்கள் இருப்பதாக தோன்றுகிறது என்று என்று கிணறு தோண்டிய மனிதர் எங்களை எச்சரிக்கை செய்தார். ஆழமாகத் தோண்டும் போது இந்த நீலமணி வெளிப்பட்டது என்று அதன் உரிமையாளர் கமாகே தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முழுபெயர் விவரங்களும் கூறப்படவில்லை.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ரத்தின வியாபாரி கமாகே இந்த கல் கிடைத்த உடனே அரசாங்க அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தார். இந்தக் கல்லை சுத்தம் செய்து அதன் மதிப்பை மதிப்பிடுவதற்கு ஒரு ஒருவருட காலம் பிடித்தது.

சுத்தம் செய்யும் செயலில் சில சின்னச் சின்ன கற்கள் அதிலிருந்து உதிர்ந்து விட்டன என்றும் அவை கூட அதிக மதிப்பு வாய்ந்த நீலமணிகள் என்றும் கமாகே தெரிவித்தார்.

ரத்னபுரியில் இதற்கு முன்பு கூட அநேக மதிப்பு வாய்ந்த ரத்தினங்களும், கற்களும் வெளிப்பட்டுள்ளன. இந்திர நீலக் கற்கள் மற்றும் பிற மிக விலை மதிப்புள்ள ரத்னங்கள் ஏற்றுமதியில் ஸ்ரீலங்கா முதல் வரிசையில் உள்ளது.

இத்தனை பெரிய ரத்தினக் கல்லை நான் எப்போதும் பார்த்ததில்லை. இது சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கும் என்று பிரபல ஜெம்மாலஜிஸ்ட் டாக்டர் காமினி ஜோயிசா தெரிவித்தார்.

ஆனால் அதில் இருக்கும் கற்கள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் அபிப்பிராய படுகிறார்கள்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img