வைரல் வீடியோ: கணவர் சேற்றுக் குழியில் விழுந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த மனைவி!

அடடே... அப்படியா? உலகம் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
husband skid on mud - 2026

ஈரமான தரையிலோ சேற்றிலோ நடக்கும்போது காலைப் பார்த்து வைக்க வேண்டும். சரியாக கவனிக்காமல் ஒரு அடி முன் வைத்தாலும் கூட கால் வழுக்கி விழ வேண்டி இருக்கும் அல்லவா! இது போல்தான் ஒரு மனிதர் சேற்றில் நடந்து ஒரேடியாக சில செகண்டுகள் காணாமல் போனார். சேறு என்று எண்ணி ஒரு பெரிய பள்ளத்தில் கால் வைத்ததால் முழுவதும் மூழ்கிப்போனார்.

அவருக்கு உதவி செய்ய வேண்டிய மனைவி இதையெல்லாம் வீடியோ எடுத்தபடியே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ நெட்டுலகில் வைரலாக மாறி வருவதால் நெட்டிசன்கள் கூட வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.

விவரம் என்னவென்றால்… பிரிட்டிஷ் டூரிஸ்ட் மார்ட்டின் லூயிஸ் தன் மனைவி ரேச்சலோடு சேர்ந்து மாலத்தீவு சுற்றுப் பயணத்திற்கு சென்றார். அங்கு வியூவாமுலா என்ற இடத்தில் சாலை வழியே செல்லாமல் ஷார்ட்கட் வழியில் செல்லலாம் என்று மனைவி அறிவுரை கூறினார். குறுக்கு வழியில் இவர்கள் ஒரு சேறு நிரைந்த இடத்தை தாண்ட வேண்டி வந்தது. அதனால் அவர் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு பாண்ட் நனையாமல் ஜாக்கிரதையாக சேற்றைக் கடப்பதற்கு காலை முன்னால் வைத்தார்.

ஒரு அடி முன்னால் வைத்ததும் கால் வழுக்கி உடனே சேற்றுக் குழியில் முழ்கி காணாமல் போய் விட்டார். சேற்றில் விழுந்த உடனே மார்ட்டின் சில செகண்டுகள் வரை வெளியில் வரவில்லை. ஆனால் அவருடைய மனைவி அவருக்கு கை கொடுத்து உதவி செய்யாமல் வீடியோ எடுத்துக்கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் கணவர் விழுந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். வெளியில் வந்தவருக்கு மிகவும் கோபம் வந்து, “என்னோடு பேசாதே!” என்றார் மனைவியிடம்.

இந்த விஷயத்தை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். இந்த வீடியோ இதுவரை 28 மில்லியன் வ்யூவ்ஸ் பெற்றுள்ளது.

அதன்பிறகு மார்ட்டின் தன் அனுபவத்தை ஷேர் செய்து, “நாங்கள் தற்போது மாலத்தீவில் உள்ளோம். என் மனைவி ஒரு இடத்திற்கு செல்வதற்காக குறுக்கு வழி இருக்கிறது என்று கூறி இவ்வாறு அழைத்து வந்தாள். சேற்றில் நடந்தால் என் கால்கள் நனைந்து போகும் என்று எனக்கு தெரியும். என் உடைகளின் ஓரம் கூட வீணாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் ஆடை நனையாமல் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஒரு அடி எடுத்து வைத்த உடனே சேற்றில் ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டேன். சேற்றில் முழுவதுமாக முழுகிப் போனதால் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகி விட்டது. நான் கீழே போய்க் கொண்டே இருந்தேன். ஒன்பதிலிருந்து பத்து அடி ஆழமான பள்ளம் அது. ஆனால் நான் பயப்படவில்லை. உடனே நீரிலிருந்து எம்பி வெளியில் வந்தேன்.

ஆனால் என் மனைவி 10 நிமிடங்கள் நிற்காமல் சிரித்துக் கொண்டே இருந்தாள். அதன்பிறகு பீச்சுக்குச் சென்று துணிகளில் பிடித்த சேற்றை அலம்பிக் கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் .

அந்த வீடியோக்களை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.