மலச்சிக்கலுக்கு மருந்துன்னு ஈல் மீனை உள்ள விட்டு… வாழ்க்கையே சிக்கலாகிப் போன விபரீதம்!

Published:

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation3
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation3

விபரீத வைத்தியம்… மலத்துவாரத்திற்குள் ஈல் மீன். அதன்பின் என்னவாயிற்று என்றால்…

தற்போது நிறைய பேர் நீண்டகால மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு பலவித மருத்துவ சிகிச்சைகளையும் முயன்று வருகிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பைத்தியக்கார வேலை செய்தார். சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு ஈல் மீனை தன் மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலத்துவாரத்தில் இருந்து மேலே நீந்திச் சென்று அவருடைய வயிற்றுக்குள் பிரவேசித்தது. அதனால் தீவிரமான வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவருடைய வயிற்றில் இருந்து உயிரோடு இருந்த மீனை வெளியே எடுத்தனர்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation1
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation1

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சீனாவில் உள்ள ஜிங்ஹுவாவில் நடந்தது. நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த ஒருவர் தன் பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு கிராமங்களில் பழங்காலத்திலிருந்து செய்து வந்த ஒரு நாட்டு வைத்தியத்தை முயற்சித்தார். இது நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று நம்பினர்.

20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஈல் மீனைப் பிடித்து வந்து உயிரோடு மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலக் குடலுக்குள் சென்று அங்கு ஓட்டையிட்டு வயிற்றுக்குள் நுழைந்தது. அதன் விளைவாக மென்மையான பெருங்குடலில் ஓட்டை விழுந்து அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நரக வேதனையை அனுபவித்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மருத்துவமனைக்கு சென்றால் தன் மானம் போய்விடும் என்று எண்ணி அந்த பயங்கரமான வலியையும் பொறுத்து பார்த்தார். ஆனால் வலி மிகவும் அதிகமாகி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர்கள் மிகவும் கவனமாக ஆபரேஷன் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினர்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation

இந்த சம்பவம் குறித்து ஆபரேஷன் செய்த டாக்டர் மீடியாவோடு உரையாடினார். பாதிக்கப்பட்டவரின் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியா வயிற்றுக்குள் சேர்ந்துவிட்டால் ஹிமோலைசிஸ் என்னும் நோய் ஏற்பட்டிருக்கும் என்று எச்சரித்தார். ஹிமோலைசிஸ் நோய் ஏற்பட்டால் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்று அவர் கூறினார்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation2
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation2

இதற்கு முன்பே கூட 50 வயது சைனீஸ் மனிதர் ஒருவர் மலச்சிக்கலிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு மலத்துவாரத்தில் ஈல் மீனை செலுத்திக் கொண்டார். அந்த மீன் வயிற்றுக்குள் நீந்திச் சென்றதால் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது.

அதனால் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். மிக கஷ்டப்பட்டு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அவரை காப்பாற்றினர். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் அவருடைய உயிர் போயிருக்கும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

மக்கள் ஆபத்தான நாட்டு வைத்தியங்களை நம்பி உயிருக்கு உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img