சின்ன சின்ன ஆசை.. பாடலை பாடி அசத்திய சின்ன ரோஜா! வைரல்!

Published:

singing baby
singing baby

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வெவ்வேறு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் என்பதற்கு சான்றாய் மேற்கு வங்க சிறுமி ஒருவர் பாடிய பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்றடைந்து கொண்டிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக தனது ஆரம்ப கால பயணத்தை ரோஜா, இருவர் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடங்கினார். இதில் ரஹ்மான் இசையமைத்து வெளியான முதல் படமான ரோஜா படத்துக்காக, அவர் தேசிய விருதை தட்டிச் சென்றார்.

அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்று தான் கூற வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களால் விரும்பப் பட்டது. கணினி மயப்படுத்தப் பட்ட துல்லியமான இசைக் கோர்ப்புகளால் கேட்பவருக்கு புதிய பரவசத்தை தந்தது ரஹ்மானின் இசை.

ஒரு கட்டத்தில் இந்திய அளவில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் பாலிவுட்டிலும் உலக அளவிலும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் பல ஹிட் ஆல்பங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மழலை மொழியில் மேற்கு வங்க சிறுமி ஒருவர், ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலை ஹிந்தி மிக அழகாக பாடுகிறார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த சிறுமியை வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோவை பல லட்சம் பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img