குழியில் விழுந்த குட்டியானை! மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறையினர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
elephant 1
elephant 1

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி வனப் பகுதியில் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த குட்டி யானையை தாயுடன் சோக்கும் பணியில் வனத் துறையினர் வெற்றி கண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து தவறி அங்குள்ள குழியில் விழுந்துள்ளது. பின்னர் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டன.

இதனைப் பாா்த்த வனத் துறையினர் குழியில் விழுந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மீண்டும் தாயுடன் சோக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்த விடியோவை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், வனத்துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக பிரிந்துச் சென்ற குட்டி யானை அதன் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டது. வனத்துறையினருக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தனது தாயைப் பார்த்ததும் அந்தக் குட்டி யானை ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டது. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு முறை கத்திவிட்டு, ஓடிச் சென்று தனது தாயுடன் சேர்ந்து கொண்டது. தனது தாயை அடையும் போது அது உற்சாகக் களிப்பில் பிளிரியது.

இப்பணியில் ஈடுபட்ட சச்சின், வெங்கடேஷ் பிரபு, பிரசாத், விஜய், ஜார்ஜ் பிரவீன்சன், தம்பா குமார், அனீஷ், குமார், பந்தலுர் ஏபிடபிள்யு குழுவினருக்கு பாராட்டுக்கள் என்றும் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.