நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன்.. அம்சங்கள்!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம் வணிகம்
xr20
xr20

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது

வெளிவந்த தகவலின்படி இந்த சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். அதேபோல் பிற சாதனங்களை விட நீண்ட காலம் நீடிக்கும் உறுதியுடன் வருகிறது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியாXR20 Rugged ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Nokia XR20
Nokia XR20

மேலும் 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் உடன் அட்ரினோ 619 ஜி.பி.யு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

nokia
nokia

மேலும் செல்பீகளுக்கம், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 4630 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.