ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44,95,830 லட்சம்! இது தான் காரணம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
water bottle
water bottle

பொதுவாக நம்மில் பலர், 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க யோசிப்பது உண்டு. தவிர்க்க முடியாத சூழலில் தான், தண்ணீர் பாட்டில் நாம் வாங்குவது உண்டு.

ஒரு சிலர் பயணத்தின் போது, ரூ.20 அல்லது ரூ.40 கொடுத்து தண்ணீர் வாங்குவது உண்டு. 40 ரூபாய்க்கு தண்ணீர் வாங்குவதே சற்று அதிகமாக தான் தோன்றும்.

ஒரு வேலை பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றால் சுமார் ரூ.60க்கு தண்ணீர் வாங்க வேண்டியது இருக்கும். ஆனால், லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதான் உண்மை. அப்படி அந்த தண்ணீரில் என்ன இருக்கிறது தெரியுமா?

இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44,95,830 லட்சம் ஆகும். இந்த தண்ணீர் பாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா? இந்த பாட்டில் 24 கேரட் தங்கத்தால் ஆனது.

பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவரால் இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகின் எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பருகினால் அதிக உத்வேகம் கிடைக்கும் என்றும், அதிக சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இதுபோலவே ஜப்பான் நாட்டில் விற்கப்படும் ‘கோனா நிகரி’ என்ற தண்ணீர் பட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தண்ணீரை பருகினால் எடை குறையும், புத்துணர்வு கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.