மருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ்கள்… தொடங்கி வைத்த ஜெகன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jaganmohan
jaganmohan

கொரேனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஆந்திராவில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதி மருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதில் 656 ஆம்புலன்ஸுகள் நடமாடும் மருத்துவமனையாக ‘104’என்ற அழைப்பிற்காக இயக்கப்பட உள்ளது. இதில் 77 பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. எஞ்சிய வாகனங்கள் அனைத்தும் ‘108’ அழைப்பிற்கான சேவை ஆம்புலன்ஸாக இயக்கப்பட இருக்கின்றன. இது குறித்து கூறிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை செயலாளர் டாக்டர் ரமேஷ்குமார், 104 ஆம்புலன்ஸ் சேவையானது, அனைவருக்கும் உரிய மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் புரட்சிகரமான திட்டம் என்றார்.

jaganmohan
jaganmohan

இவை கிராமப்புற சிகிச்சை மையங்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஒன்றிணைக்கும். இந்த நடமாடும் மருத்துவமனைகள், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் உடல்நிலை குறித்த சுகாதார அட்டையை பராமரிக்கும். குழந்தைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று கூறினார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
jaganmohan jpg
jaganmohan jpg

இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆம்புலன்ஸ்களில் நவீன மருத்துவ கருவிகளுடன் வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆம்புலன்ஸில் பணியில் இருக்கும் மருத்துவர், மற்றொரு மருத்துவருடன் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடத்த முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.