ராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினிமா
sreya
sreya

நடிகை ஸ்ரேயா தனது மகளுக்கு வைத்திருக்கும் பெயருக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சில தினங்களுக்கு தன் குழந்தையை அறிமுகப்படுத்தி அனைவர்க்கும் ஆச்சர்யம் அளித்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தா ஸ்ரேயா தனது காதலர் ஆன்ட்ரூவ் என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை சில தினங்களுக்கு முன்பு தான் ஸ்ரேயா வெளிப்படுத்தினார்.

மேலும் ஸ்ரேயா தனது 9 மாத பெண் குழந்தைக்கு ‘ராதா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது தன் குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பெண் குழந்தை என்று என் அம்மாவிடம் சொன்ன போது அவர் ராதா ராணி வந்திருக்கிறாள் என்றார். அதையடுத்து ‘ஓ உங்கள் அம்மா உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று ஆன்ரி கூறினார், நான் ‘நிச்சயமாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று சொன்னேன்.

பிறகு அவர் ஏன் உன் அம்மா குழந்தையை ரஷ்ய பெயரில் அழைக்கிறார் என்று கேட்டார். நான், ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் ‘ராதா என்றால் ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி’ என்று கூறினார்.

radha
radha

அப்போது தான் அவளுடைய பெயர் ராதா என்று நாங்கள் முடிவு செய்தோம். அவளுடைய முழு பெயர் ராதா சரண் கோஷீவ் என்றும் அவர் மேலும் கூறினார்.

“ராதா என்றால் ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்திலும் மகிழ்ச்சி என்று பொருள். அதனால்தான் நாங்கள் ராதாவை வைத்தோம், தாத்தா பாட்டி இருவரும் அவளை ராதா என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இது எளிதான சுகப்பிரசவம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா தற்போது ஆர்ஆர்ஆர், கமனம், ‘ஏ மியூசிக்கல் ஸ்கூல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.