எழுபது வயதில் தாயான மூதாட்டி! தாத்தா மகிழ்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
old couple
old couple

குஜராத் மாநிலத்தில் 70 வயதில் பெண் ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், தற்போது அந்த பெண்மணியும் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார். மோடா கிராமத்தை சேர்ந்த தம்பதி ரபரி(70) – மல்தாரி(75).

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.