சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் நன்கு விளையாடுவதாலும், வாக்காளர்க்கு ரூ.4 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், பண முறைகேட்டைத் தடுக்க, அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக., நிர்வாகிகள், அதிகாரிகள் சிலரின் வீடுகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது,. இதில், சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது.
இது குறித்த தகவல்கள்:
* வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்தார். மேலும் தேர்தல் பாதுகாப்பிற்கு கூடுதலாக 5 கம்பெனி படைகளை கோரியுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
* அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்
காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை – முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்
வருமான வரித்துறையினரின் சோதனைகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தளவாய் சுந்தரம், “தினகரன் வெற்றி வாய்ப்பு உறுதியானதால் ஓபிஎஸ் தூண்டுதலால் மத்திய அரசு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
தனியறையில் வைத்து விஜயபாஸ்கரை மிரட்டி வருகின்றனர்!
மாநில அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று தளவாய் சுந்தரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரது இடத்துக்கு
அதிமுக தொண்டர்களின் வருகையால் பரபரப்பு ஏற்பட்டது.
வலை விரித்த தேர்தல் கமிஷன்; சிக்கிய தினகரன்:
அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் வகையாக சிக்கி கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. நடப்பதை எல்லாம் கண்டுகொண்டும் கண்டுகொள்ளாதது போல் இருந்த கமிஷன் அதிகாரிகள் முழு பலத்தையும் பயன்படுத்தி தங்கள் ஆளுமையை நிரூபிக்க முனைந்துள்ளனர்.
ஒரு பல்கலை வேந்தர், மருத்துவத்துறை உயர் அதிகாரி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, அதிமுக எம்பிக்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களை சுற்றி வளைத்துவிட்டது வருமான வரித்துறை!
இந்நிலையில், தினகரன் மற்றும் அதிமுக அம்மா பிரிவை தேர்தல் தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வருமான வரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:
அதிமுக எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை!
பொது சுகாதாரத்துறை அதிகாரி குழந்தைசாமி வீட்டிலும் சோதனை!
துணை வேந்தர் விஜயலட்சுமியின் இல்லத்திலும் சோதனை!
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கட்டுகட்டாக பணம் சிக்கியதாக தகவல்!
காரிலிரிந்து டோக்கன்களை கைப்பற்றிய அதிகாரிகளிடம் யார் யார் எவ்வளவு பணம் பெற்றனர் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கியது!
ரூ.2000 நோட்டுகள் மதுரையிலுள்ள ஒரு குவாரி அதிபர் வீட்டிலிருந்து வந்ததாக தகவல்!
தேர்தல் செலவாக தினகரன் அணி ரூ.120 கோடி செலவு செய்துள்ளதாக வந்த தகவலால் இந்திய அளவில் அதிர்ச்சி!
இந்நிலையில், டிடிவி.தினகரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தேர்தல் கமிஷனில் சசிகலா புஷ்பா புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
வருமான வரித் துறை சோதனையில் இதுவரை 3 கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித் துறை இணை இயக்குநர் அளித்த தகவல்படி,
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகள் உட்பட 36 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறதாம்.
சரத்குமார் வீட்டிற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு சரத்தை அனுப்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் அதை நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையை கிண்டல்செய்துள்ளார் சரத்குமார்!
என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்’ என்று கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
மேலும், சோதனை நடத்துவதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறிய சரத்குமார், அதிகாலை 5.45 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும்,
கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என கேட்டனர் ஐடி அதிகாரிகள்;
ஐடி அதிகாரிகள் சோதனை என்பது சதி ;
அலுவலகத்தில், வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர்;
தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே!ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனைநடத்தினர்.
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர் என்று கூறினார்.




