சென்னை:
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது வருமானவரித்துறையினர் கதவைத் தட்டினர் என்று சரத் குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விநியோகம் நடைபெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், இன்று காலை முதலே அதிமுக., வினர், சரத்குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சரத்குமார் வீட்டிற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு சரத்தை அனுப்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் அதை நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையை கிண்டல்செய்துள்ளார் சரத்குமார்!
என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்’ என்று கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
மேலும், சோதனை நடத்துவதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறிய சரத்குமார், அதிகாலை 5.45 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என கேட்டனர் ஐடி அதிகாரிகள்; ஐடி அதிகாரிகள் சோதனை என்பது சதி; அலுவலகத்தில், வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர்; தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே! ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனை நடத்தினர். ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர் என்று கூறினார்.



