பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை.. தடுக்க ஆப்பை அறிமுகப்படுத்திய போலீஸ்!

sako
sako

கோவை மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பொதுவாக வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போதோ அல்லது வேலைக்கு செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது இல்லை.

மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்துவரும் போலீசார், இரவு மற்றும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதனை யாரும் கடை பிடிக்காததால் தொடர்ந்து கோவை மாவட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

கடந்த மூன்று வருடங்களில் கோவை மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 346 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

தற்போது போலீசார் ரோந்து செல்லும் பொழுது பூட்டியிருக்கும் வீடுகளை அடையாளம் காண்கிறார்கள். அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

பூட்டிய வீடுகள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட போலீஸ் சார்பில் பிரத்யேக செயலி ‘சகோ’ புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பாதுகாப்பான கோவைஎன்பதன் சுருக்கமே ‘சகோ’.

இந்த செயலியில் வீட்டை பூட்டி விட்டு செல்லும் பொதுமக்கள் முதலில் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். அதற்கு ஓடிபி அதனைப் பதிவு செய்து உள்ளே நுழையலாம்.

தங்களது வீட்டின் முகவரி, எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வீடு பூட்டப்பட்டிருக்கும், எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும்.

அதை தொடர்ந்து தானாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட போலீசார், அந்த முகவரியை முகவரிக்கு நேரடியாக சென்று கொள்ளை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொள்பவர்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

மேலும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று வீட்டின் முகப்பு பகுதியை புகைப்படம் எடுத்து பதிவு செய்வர். எந்த போலீசார் அங்கு சென்று ரோந்து பணியை மேற்கொண்டார்கள் என்பது குறித்த விவரங்கள் செயலி மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

செல்போன் பயன்படுத்தாத பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தங்களின் வீடு பூட்டப்பட்டிருக்கும் குறித்த தகவலை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories