ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இத்தாலி பயணம்!

Published:

pmmodi in un
pmmodi in un

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி 20 மாநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி 20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாத மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அதன்பிறகு பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். கிளாஸ்கோவில் நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 1 – 2 வரை நடைபெற உள்ளது.

26-வது கட்சிகளின் மாநாடு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இந்தாண்டு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

Related articles

Recent articles

spot_img