செம லுக்.. பக்கா பேக்ரவுண்ட்… வைரலாகும் தல லேட்டஸ்ட் ஃபோட்டோ!

Published:

ajith kumar
ajith kumar

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தல அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

ajith 1 9
ajith 1 9

மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அதனைத்தொடர்ந்து, தற்போது தல அஜித் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (Border Security Force) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.

தற்போது ராஜஸ்தான் பகுதியில் ஒரு மலையின் உச்சியில் தல அஜித் நிற்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களை இந்த புகைப்படம் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img