இரும்பு கேட்டில் தலையை விட்டு தவித்த தெருநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Published:

dog 3
dog 3

கோவையின் முக்கிய பகுதியில் சாய்பாபா காலனி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை மாட்டிக் கொண்டது.

நாய் கத்தி கூப்பாடு போட்டது . இதனால் அந்த பகுதி மக்கள் இணைந்து அதை வெளியே எடுக்க முயற்சித்தனர்.

ஆனால் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் நாயும் கத்துவதை குறைத்து அதிலேயே படுத்துக்கொண்டது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணையை மொத்தமாக ஊற்றினர்.

நாயின் வாயை கட்டினர். கொஞ்சம், கொஞ்சமாக இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர்.

தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நாய் மிகச் சோர்வடைந்தது. அப்பகுதி மக்களும், தீயணைப்பு வீரர்களும் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன் பிறகு உற்சாகமாக வாலை ஆட்டி கொண்டு ஓடிவிட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img