தீப திருவிழாவில், ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. இவற்றை, 20 கி.மீ., துாரம் வரை உள்ள மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 10ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது.
வரும், 19ல், 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன.
இவை, 20 கி.மீ., துாரம் வரை மின்விளக்குகளால் ஜொலிக்கும் காட்சியை கண்டு மக்கள் மகிழ்ந்தனர். 10 நாட்கள் நடக்கும் விழாவில் மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் மட்டும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 18ல் வரும் கார்த்திகை மாத பௌர்ணமி, 19ம் தேதி மஹா தீபத்தன்றும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.