
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலுள்ள காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. பட்டி போட்டு ஆடுகளை வளர்த்து வரும் இவரிடம் வளர்ப்பு நாய் ஒன்றும் உள்ளது.
அந்த ஆடும் நாயும் ஒரே காலத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. நாய் தனது குட்டிகளை அரவணைப்பது போல இன்றி ஆடு அவ்வப்போது குட்டிகளை விட்டு தனியாக மேய்ச்சலுக்கு சென்றுவிடுமாம்.
இதனால் ஆட்டுக் குட்டிகள் பசியில் வாடுவது வாடிக்கையாகி வந்ததுள்ளது. இதனால் நாய் தன்னுடைய குட்டிகள் போல நினைத்து ஆட்டு குட்டிகளுக்கும் பால் கொடுக்க துவங்கியுள்ளது. தற்போது இது தினந்தோறும் நடக்கும் நிகழ்வாகிவிட்டது.
நாய் ஒன்று ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் வினோத நிகழ்வை ஊரார்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். இதையடுத்து இதுதொடர்பான வீடியோக்களும் வலைதளங்களில் வைரலாகியுள்ளன.