ஹோட்டலிருந்து நோயாளிக்கு வாங்கி சென்ற இட்லியில் தவளை! வைரலான வீடியோ!

Published:

frog idly
frog idly

கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இருந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினரான கும்பகோணம் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இட்லி பார்சலை வாங்கி வந்துள்ளார்.

அதனைதொடர்ந்து பார்சலை பிரித்து இட்லியை சாப்பிட முயன்றபோது, அதில் தவளை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து முருகேசன் உணவக உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை முருகேசன் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார்.

அதன்பின்னர் இந்த பிரச்சனை பெரிதாக மாறவே உடனடியாக உணவத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார் உணவக உரிமையாளர்.

hotel
hotel

இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சாப்பிடும் உணவை அஜாக்கிரதையாக சமைத்த உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, உணவகத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Related articles

Recent articles

spot_img